Monday, September 16, 2024

எம்மூர் பாதுகாவலி

 எம்மூர் பாதுகாவலி

பரமனண்டை எமக்காக பரிந்து பேசும் 

பாதுகாவலியே  பரிசுத்த பிரகாசியம்மாளே 

பாதுகாப்பாய் பராமரிப்பாய் பாவிகள் எம்மை 

பரமன் சந்நதி சேர்த்திடுவாயம்மா.

    ஆண்டவருக்களித்த உன் அழகு வாழ்வை 

    ஆசைகொண்டு அரசன் கேட்க 

    மறுத்துவிட்டாயே மங்கையர்க்குன்றே 

    மரணம் விளைவு என்றறிந்தபோதும்.

மரணம் என்பது ஒரு கணம் நேரம் 

மறுபடி வேதனை தரும் வகையாக 

மன்னன் உந்தன் கண்களை களைய 

மாபரனைக் கண்டாய் அகக் கண்ணாலே.

    கண்களிருந்தும் பலர் காணாமலிருக்க 

    கண்களின்றி கண்டுகொண்டாய் 

    கடவுளின் மைந்தன் கர்த்தர் இயேசுவை    

    காட்டுவாய் எமக்கும் அக்கருணைக்கடலே.

ஞானப்பிரகாசியான பாதுகாவலி நீ 

ஞாலத்தில் உமதடியார் பிரகாசித்து 

ஞாலமெல்லாம் சிறக்கச்செய்தாய்.

ஞானமின்னும் வேண்டுமம்மா . 

    பசியின்றி பராமரித்தாய் இதுவரை நீ 

    பசியின்றி பாவியெமை வாட்டுதுவே 

    பரந்த நீல கடல் கூட - பாவி எமை 

    பழிதீர்க்க படையெடுத்து வருகுதுவே . 

காப்பாய் எமைப் பாதுகாப்பாய் - பாவ 

களங்கங்கள் சேராமல் பாதுகாப்பாய் 

சேர்ப்பாய் எமை என்றும் சேர்ப்பாய் 

இறையரசில் எமையின்று சேர்ப்பாய் .  

                           [குரிசுமாலை , வாகமண் - 09.09.1990]


இறையரசின் நற்செய்தி 

அண்ணல் வந்தார் இயேசு அண்ணல் வந்தார் 

பாவிப் பரிதாபம் கண்டதும் அண்ணல் வந்தார்.

    எளியோர்க்கு இறையரசின் சேதி சொன்னார் 

    கைதிகட்கு கடவுள் தரும் விடுதல் சொன்னார் 

    ஒடுக்கப்பட்டோர் உரிமையுடன் வாழச் செய்தார் 

    குருடார்க்கு பார்வை தந்து பார்க்கச் செய்தார்.

இதற்கான அதிகாரம் ஆண்டவர் அளித்தார் 

ஆவியரோ  அபிஷேகம் செய்தும் பணித்தார் 

இறையரசின் அடையாளம் இதுவேயென்றார் 

இறைவார்த்தை இங்ஙனமே நிறைவேறியதென்றார்.

        ['கண்ணன் வந்தான் எங்கள்... தழுவல் - குரிசுமலை 13.09.1990]


இறைவா நீ வரவேண்டும் 

உன்னை நீயே தரவேண்டும் 

ஒருநாளும் உனைப் பிரியாமல் 

உயிர் வாழும் வரம் வேண்டும் . 

    உள்ளத்தினுள்ளே நீயுண்டு -அதை 

    உணர்ந்திடும் வரம் வேண்டும் 

    உள்ளத்திலுறையும் உன்னை 

    உலகினிற்களிக்கும் வரம் வேண்டும் . 

உலகிலுள்ள அனைத்துயிரும் 

உனையறிந்திடல் வேண்டும் 

உயிராக உருவாக எங்கும் வாழ்வது 

நீயெனப் புரிந்திடல் வேண்டும்.

    அறிந்தவர் அனுபவம் பெற்றவர் எல்லாம் 

    மற்றவர்க்குமதை சொல்ல வேண்டும்

    அவ்விதமாக அவனியிலெல்லாம் 

    உன்புகழ் பரவிடல் வேண்டும்.

                       [குறிசுமலை 19.09.1990]


ஆண்டவனைத்தேடி எல்லா 

ஆலயங்களும் அலைந்தேன் 

அங்கெங்கும் காணவில்லை அவர் உருவை 

அல்லல்பட்டு அவதியுற்று அன்னையிடம் வந்தேன் 

அவன் வடிவில் அமைதியான ஆண்டவனை கண்டேன் . 

    திருத்தலங்கள் திக்கெட்டும் சென்றவரைக்கேட்டேன் 

    திருசுதனை திட்டமாக கண்டதென்றால் சொல்க 

    திருத்தலத்தில் திக்கற்றவர் திகைத்திருக்க கண்டேன் 

    திரும்பி வந்தே தாய் மடியில் திருசுதனை கண்டேன்.

கடவுளரைக் கல்வடிவில் கோயில்களில் கண்டேன் 

கனிவுடைய கருணையுள்ளம் அதிலெங்கும் இல்லை 

களைப்புற்று கடைசியாக தாயிடத்தில் வந்தேன் 

காத்திருக்கும் கருணையுள்ளம் அவளிடத்தே கண்டேன்.

    உலகைத்துறந்தவனே உண்மை தெரிந்தவனென்று 

    ஊரார் சொல்ல கேட்டேன் உவப்புடனே ஓடி வந்து 

    உண்மையைக் காட்ட கதியின்றி கேட்டேன் 

    ஊமையாக இருந்துவிட்டார் உத்தமர் அவரும்.

பக்தர் பலர் பரவசமாய் பரமனைப் பாட கேட்டேன் 

ஊமையாக இருந்துவிட்டார் உத்தமர் அவரும் 

பக்தர் பலர் பரவசமாய் பரமனைப்பாட கேட்டேன் 

பரிவுடனே அவர்களிடம் பரமன் யாரென கேட்டேன்...

பதிலாக பரிகசிக்கும் பார்வையல்லாதொன்று 

பக்தனிடம் பார்க்கவில்லை பயனும் இல்லை 

    ஆலயங்கள் திருத்தலங்கள் கோயில்கள் ஒன்றும் 

    ஆண்டவனை ஆட்கொள்ள அவ்வாறு இயலாது 

    துறவியரும் பக்தர்களும் தூயவனைக் காட்டார் 

    தூயவளாம் அன்னையிடம் ஆண்டவனை காண்க .

                           [குறிசுமலை 20.09.1990]

   

  

No comments:

Post a Comment

John Rose’ Birthday – 01.07.2024 and Selva Rani...

 John Rose’ Birthday – 01.07.2024 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ,  ஜாண்றோஸ் ! இன்றுபோல் என்றும் மன நிறைவோடு , உடல்-உள்ள நலத்தோடு வாழ்க , ...