Tuesday, September 17, 2024

இனியவள் இரயுமன்துறை...

 இனியவள்  இரயுமன்துறை...

1. இனியவளே இரயுமன்துறைத் தாயே 

இயற்கையின் இளமை நிறைந்தவளே 

இருப்போற் கின்பம் அளிப்பவளே 

இறந்தோர் உன்னை இழந்தனரே.

    தாமிரபரணி உந்தன் தாள் தழுவ 

    அரபிக்கடல் உந்தன் தலை வருட 

    கடற்காற்று உனையென்றும் அரவணைக்க 

    கண்ணைப் பறிப்பது உன் அழகே.

இளங்காளையார் இளம் மீனவர் 

கயல்விழி மாதர் கவின் மிகு மங்கையர் 

கதிரவன் ஒளியினில் கடற்கரைக் காதலர் 

கலந்துரையாடுவர் கழிப்புறுவர்.

                        -31.08.1979


2. இறை அமரும் துறை...

இறைவனின் இருப்பிடம் இயற்கையிலேயே 

இயற்கையின் மகுடம் இரயுமன்துறையிலே 

இத்தகைச் சிறப்பை பெற்றவளாதலின் 

இரயுமன்துறை இறை அமரும் துறை என்றனர்.

    இரையும்மன் தம்பியின் இசை போன்றொரு 

    இனிமை யுடைத்தவளா தலின் அன்றோ

    இரயுமன்துறையென பழமையின் சான்றோர் 

    இயம்பினர் இனிதிப்பெயர் எம் ஊருக்கு.

இறைவன் இயற்கையை ஈன்றது போன்று 

இசையும் இனிமையை தந்தது என்றும் 

இயற்கையின் இனிமையுடைத்த எம்மூரும் 

ஈன்றனள் இறை பணியாளரை இசை மேதைகளை.

    இறையருள் இங்ஙனம் கிடைக்கப்பெற்றும் 

    ஈசனை மறந்து வாழ்ந்தனர் சில நாள் 

    இதனாலன்றோ ஈசனும் சினந்து 

    இன்னல் வறுத்த கடலினைப் பணித்தார்.

இன்றளவும் வாழ்வளிக்கும் கடல் கூட 

இரக்கமின்றி இடர்படுத்தி வாட்டுகின்றது 

இறுமாப்பின்னும் இளைக்கவில்லை ஈசனின் 

இரக்கமும் ஈகையும் இறங்கவில்லை.

                          -குரிசுமலை -07.09. 1990  


No comments:

Post a Comment

John Rose’ Birthday – 01.07.2024 and Selva Rani...

 John Rose’ Birthday – 01.07.2024 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ,  ஜாண்றோஸ் ! இன்றுபோல் என்றும் மன நிறைவோடு , உடல்-உள்ள நலத்தோடு வாழ்க , ...