Saturday, September 14, 2024

இசைத் தமிழுக்கு இதய காணிக்கை

இசைத் தமிழுக்கு இதய காணிக்கை 

இசைத்தமிழே உனைப் புகழ்ந்திடவே 
இயற்றிடுவேன் புதுக்கவிதை பல
கவிதைக்குப் பண் அமைப்போம் 
அதை தாளமுடன் பாடிடவே.
    கேட்பவர்கள் உருகிடவே - அதை 
    இனிமையுடன் இசைத்திடுவோம் 
    தமிழிசையின் இயல்பதென -பிறர் 
    பிறர் மொழிந்திடவே வாழ்ந்திடுவோம் . 
இயலுடனே இசை வளர்த்த தமிழினமே 
இன்றுன் இசைத்தமிழின் நிலையென்ன
தமிழிசைக்கு குரல்கொடுக்க வேறு பலர் 
வந்த நிலை அவலநிலையில்லையன்றோ.
    தொன்மையுள்ள தமிழிசைக்கு 
    தரணியில் நிகர் எதுவுமில்லை 
    தன்மானம் குறையாமல் - அது 
    தழைத்தோங்க பாடுபடு.   
                                        7.2.1980

அன்னையின் ஆதரவுக்கு...

அம்மா பாவத்தால் என் ஆன்மா 
அழிந்து விடுமென் றஞ்சுகிறேன் 
தாபம் நிறைந்தே நான் உன்னை 
அண்டி வருகிறேன் ஆதரி நீ . 
    நேசத்தாயே இறைமகனை 
    எமக்கு ஈன்று தந்தாயே 
    வேந்தனை ஈன்று தந்தமையால் 
    மாந்தரின் மாதா ஆனாயே . 
மதுரமும் சாந்தமும் நிறைந்தவளே 
மானிடர் எம்மை ஏற்றருளே 
கிருபை தயாபம் உடையவளே 
கிறிஸ்துவோடேம்மை சேர்த்தருளே . 
      ['கடவுளின் பிரதிநிதி '  மாத இதழில் பிரசித்தம் செய்தது No.260, September 1977]



 

No comments:

Post a Comment

John Rose’ Birthday – 01.07.2024 and Selva Rani...

 John Rose’ Birthday – 01.07.2024 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ,  ஜாண்றோஸ் ! இன்றுபோல் என்றும் மன நிறைவோடு , உடல்-உள்ள நலத்தோடு வாழ்க , ...